27 மனைவிகள்...150 பிள்ளைகள்! கனடாவில் வாழ்ந்து வரும் 64 வயது தந்தையை பற்றி மகன் வெளியிட்ட வீடியோ

Report Print Santhan in கனடா
984Shares

கனடா நாட்டின் கொலம்பியா மாகாணத்தில் பவுண்டிபுல் பகுதியில் வின்ஸ்டன் பிளாக்மோர்(64) என்பவர் வசித்து வருகிறார்.

இவருக்கு 27 மனைவிகள், மொத்தம் 150 குழந்தைகள், இவரின் குடும்பம் தான் கனடாவிலே மிகப் பெரிய குடும்பம் என்று கூறப்படுகிறது.

இதுவரை வெளி உலகுக்கு இது குறித்து தெரியாத வின்ஸ்டன் பிளாக்மோரின் குடும்பம் குறித்து அவரின் மகனும் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் மெர்லின் பிளாக்மோர் (19) தன்னுடைய டிக் டாக்கில் தனது குடும்பத்தினர் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை புகைப்படங்களுடன் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அதில், அனைவருமே ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். தங்களின் சொந்த அம்மாவை ஆங்கிலத்தில் mum என்றும் அப்பாவின் பிற மனைவியர்களை Mother என அழைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது தந்தையின் 27 மனைவிகளில் 22 பேருக்கு மட்டுமே அவருடன் குழந்தைகள் இருப்பதாகவும், பிற சகோதர, சகோதரிகளை போல நாங்கள் சண்டையிட்டுக்கொள்வதில்லை மாறாக நாங்கள் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் பாசமாக வளர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது அப்பாதிருமணம் செய்த 27 பெண்களில், அக்கா- தங்கைகள் ஜோடி மட்டும் 4 இருப்பதாகவும், ஒரே தாய் வயிற்றில் பிறந்த 3 சகோதரிகளையும் தனது தந்தை திருமணம் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமா? ஒரே ஆண்டில் 12 குழந்தைகள் பிறந்ததாகவும், அவர்கள் 12 பேருக்குமே M என ஆங்கிலத்தில் தொடங்கும் வார்த்தையில் தான் பெயர் வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பெரிய குடும்பம் என்பதால் தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே தோட்டம் அமைத்து அறுவடை செய்வதாகவும், விவசாய நிலங்களில் அனைவரும் ஒன்றுக்கூடி வேலை செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்