கனடாவில் நள்ளிரவில் கடும் குளிரில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரிட்டீஷ் கொலம்பியாவின் Dawson Creekல் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பெண்ணொருவர் நள்ளிரவில் வீட்டருகில் இருக்கும் நண்பர் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கு இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.
பின்னர் தனது வீட்டுக்கு கிளம்பி அவர் சென்றிருக்கிறார்.
ஆனால் வீட்டுக்கு செல்லும் முன்னரே அவர் உயிரிழந்திருக்கிறார்.
அந்த சமயத்தில் -41.8 டிகிரியில் கடும் குளிராக இருந்திருக்கிறது.
இப்பகுதி கடுமையான குளிர் காலநிலை எச்சரிக்கையின் கீழ் உள்ளது மற்றும் பயணம் செய்யும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு குடியிருப்பாளர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.