பிரபல நாட்டின் ராணுவத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் மீது கனடா பொருளாதார தடை விதிப்பு! வெளியான முழு தகவல்

Report Print Raju Raju in கனடா
0Shares

மியான்மர் ராணுவத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் மீது கனடா பொருளாதார தடை விதித்துள்ளது.

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.

இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்துவந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தான் கனடா மற்றும் பிரித்தானிய நாடுகள் மியான்மரின் 9 ராணுவ அதிகாரிகள் மீது பொருளாதார தடை விதித்துள்ளன.

புதிய பொருளாதாரத் தடை குறித்து மியான்மர் ராணுவம் தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

முன்னதாக, ராணுவத்துக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு சுமார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மியான்மர் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்