கனடாவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான ஆண்ட்ரீஸ் அபோஸ்டோலோபவுலஸ் தனது 69வது வயதில் காலமானார்.
கிரீஸ் நாட்டில் பிறந்த ஆண்ட்ரீஸ் தனது டீன் ஏஜ் பருவத்தில் கனடாவுக்கு குடிபெயர்ந்தார்.
கனடாவில் தொழிலாளியாக பணியை தொடங்கிய அவர் பின்னர் துப்புரவு நிறுவனம் மற்றும் ஒரு பிளாஸ்டிக் பை உற்பத்தி வணிகத்தை செய்தார்.
இதன்பின்னர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்தார். தனது திறமையாலும், கடினமான உழைப்பாலும் ஆண்ட்ரீஸ் பெரும் கோடீஸ்வரராக ஆனார். அவரின் சொத்து மதிப்பு $4 பில்லியன் என்ற அளவுக்கு ஆனது.
இந்த நிலையில் ஆண்ட்ரீஸ் திடீரென உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் நடத்தி வந்த நிறுவனங்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 15ஆம் திகதி ஆண்ட்ரீஸ் உயிரிழந்துவிட்டார்.
அவர் ஒரு பெருமை வாய்ந்த கிரேக்க-கனடியராக இருந்தார்.
ஆர்வமுள்ள தொழிலதிபராக இருந்த ஆண்ட்ரீஸ் அர்ப்பணிப்புள்ள குடும்ப மனிதராகவும் திகழ்ந்தார் என கூறப்பட்டுள்ளது.
உயிரிழந்த ஆண்ட்ரீஸ்க்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.