கனடாவில் கொரோனாவால் உயிரிழந்த கேரள நாட்டு செவிலியர்: பல்வேறு தரப்பினர் புகழாரம்

Report Print Balamanuvelan in கனடா
0Shares

கனடாவில் கொரோனாவால் உயிரிழந்த கேரள நாட்டு செவிலியருக்கு தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை புகழாரம் செலுத்திவருகின்றனர்.

கனடாவின் North Battleford பகுதியில் செவிலியராக பணி புரிந்தவர், கேரளாவைச் சேர்ந்த டாம் தாமஸ் (34).

மருத்துவமனையில் பணிபுரிந்த தாமஸுக்கு கொரோனா தொற்றியதையடுத்து, அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 15ஆம் திகதி அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளார்.

தாமஸுக்கு மெரின் ஜார்ஜ் என்ற மனைவியும், 18 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இன்று அவருக்கு இறுதிச்சடங்கு நடந்த நிலையில், அவரது அஸ்தி அவரது சொந்த ஊரான கேரளாவுக்கு அனுப்பப்பட உள்ளது.

cjnb.ca

உயிரிழந்த தாமஸை அவரது மருத்துவமனை ஊழியர்கள், North Battlefordஇன் பிரீமியர், தாமஸின் தேவாலய பாதிரியாரான மேத்யூ முதலான பல்வேறு தரப்பினர் மனமார புகழ்கிறார்கள்.

அவர் ஒரு நல்ல தந்தை, பொறுப்பான ஊழியர், சமுதாயத்திற்கு பங்களிக்குப்பதில் ஆர்வமாக ஈடுபடுபவர் என புகழாரம் சூட்டுகிறார் மேத்யூ.

இதற்கிடையில், தாமஸின் மரணம், முதியோர்களை மட்டுமே கொல்லும் என கருதப்பட்ட கொரோனா, இளம் வயதினரையும் பலிகொள்ளத்தான் செய்கிறது என்ற அதிர்ச்சியளிக்கும் செய்தியை உலகுக்கு அளித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்