கனடாவில் அதிகளவில் கஞ்சா மிட்டாய் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி! கைது செய்யப்பட்ட தந்தை

Report Print Raju Raju in கனடா
0Shares

கனடாவில் கஞ்சா மிட்டாய் சாப்பிட்ட 3 வயது சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் தந்தை கைது செய்யப்பட்டார்.

Quinte Westஐ சேர்ந்த 3 வயது சிறுமி அதிகளவிலான கஞ்சா மிட்டாயை எடுத்து கடந்த வெள்ளிக்கிழமை சாப்பிட்டிருக்கிறார்.

இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தற்போது அவர் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணையை அடுத்து பொலிசார் சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.

பின்னர் விடுவிக்கப்பட்ட அவர் மார்ச் 18ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், சரியாக எவ்வளவு கஞ்சாய் மிட்டாயை சிறுமி சாப்பிட்டார் என தெரியவில்லை.

சிறார்கள் கைகளுக்கு எட்டாதவாறு இந்த பொருட்களை வைக்க வேண்டும்.

வேறு யாருக்கேனும் சிறுவர், சிறுமிகள் கஞ்சா மிட்டாய் சாப்பிட்டதாக தகவல் தெரிந்தால் 911 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்