மருத்துவரின் எச்சரிக்கையை மீறி கார் ஓட்டிய நபர்... பரிதாபமாக பலியான இந்தியப் பெண்: தீர்ப்பில் இரக்கம் காட்டிய நீதிபதி

Report Print Balamanuvelan in கனடா
0Shares

மருத்துவரின் எச்சரிக்கையை மீறி கார் ஓட்டிய ஒரு கனேடியரால் இந்தியப் பெண் ஒருவர் பரிதாபமாக பலியான வழக்கில், இரக்கத்தின் அடிப்படையில் நீதி வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இமாச்சலப்பிரதேசத்தில் பிறந்து 1996ஆம் ஆண்டு கனடாவுக்கு குடிபெயர்ந்தவர் அஞ்சனா ஷர்மா.

அஞ்சனாவுக்கு சுனீத் ஷர்மா என்ற கணவரும், சானியா (19), ருத்ரான்ஷ் (15) மற்றும் ஆர்ச்சிஷா (12) என்ற மூன்று பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

கடந்த 2017ஆம் ஆண்டு, மே மாதம், கால்கரியில் வாக்கிங் சென்றுகொண்டிருந்த அஞ்சனா மீது கார் ஒன்று மோதியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த காரை ஓட்டியவர் James Beagrie என்பவர். ஜேம்ஸுக்கு மூளைப் புற்றுநோய் இருந்துள்ளது.

ஆகவே, அவர் கார் ஓட்டக்கூடாது என அவரது மருத்துவர் அவரை எச்சரித்துள்ளார். ஆனால், எச்சரிக்கையை மீறி கார் ஓட்டிய ஜேம்ஸுக்கு திடீரென மயக்கம் வந்ததால், அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து அஞ்சனா மீது மோதியுள்ளது, அவர் உயிரிழந்துவிட்டார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜேம்ஸுக்கு இரண்டரையாண்டு சிறைத்தண்டனயும் ஏழரையாண்டு காலம் கார் ஓட்ட தடையும் விதிக்குமாறு அரசு தரப்பு சட்டத்தரணி வாதிட்டார்.

ஆனால், ’இரக்கம் இல்லாத நீதி, நீதியே அல்ல’ என்று கூறிய நீதிபதி Richard Neufeld, ஜேம்ஸுக்கு 27 மாதங்கள் சிறைத்தண்டனையும், ஏழரையாண்டு காலம் கார் ஓட்ட தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

ஜேம்ஸுக்கு இருக்கும் புற்றுநோய் அதிகரிக்குமானால், அவர் இன்னும் 12 மாதங்கள் கூட வாழ்வாரா என்பது சந்தேகமே.

ஆகவே, அதை கருத்தில் கொண்டு, தான் 30 மாத தண்டனையை 27 மாதங்களாக குறைத்துள்ளதாக தெரிவித்த நீதிபதி, உயிரிழந்த அஞ்சனாவைக் குறித்து எனக்குத் தெரிந்தவரையில், அவர் தன் தீர்ப்பை ஏற்றுக்கொள்வார் என தான் நம்புவதாக தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட ஜேம்ஸிடம் பேசிய நீதிபதி, இரண்டரையாண்டு சிறைத்தண்டனை என்பது ஒரு ஆயுள் தண்டனை போல் மாறிவிடலாம்.

நான் உங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டதாக கருதவில்லை, நீங்கள் உடல் நலம் பெறுவீர்கள் என நம்புகிறேன் என்றார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்