கொரோனா தடுப்பூசி கிடைத்த மகிழ்ச்சியைக் கொண்டாட கனேடியர் செய்த விடயம்: ஒரு வைரல் வீடியோ

Report Print Balamanuvelan in கனடா
0Shares

தனக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்ததைக் கொண்டாட, கனேடியர் ஒருவர் உறைந்த ஏரி ஒன்றின் மீது நடனம் ஆடிய வீடியோ வைரலாகியுள்ளது.

கனேடிய நடனக் கலைஞரான Gurdeep Pandher என்பவருக்கு இம்மாதம் 2ஆம் திகதி கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

அதைக் கொண்டாட, Yukon என்ற இடத்திலுள்ள உறைந்த ஏரிக்கு சென்ற அவர், அந்த ஏரியின்மீது பாங்க்ரா நடனம் ஆடியுள்ளார்.

நேற்று மாலை நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன், அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடவும், நம்பிக்கையையும் பாசிட்டிவ் எண்ணங்களை ஏற்படுத்தவும் உறைந்த ஏரி ஒன்றின்மீது நான் நடனம் ஆடினேன்.

நான் கனடா முழுமைக்கும், அதை தாண்டியும் எல்லோருடைய சுகம் மற்றும் நலத்துக்காக அந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் பாசிட்டிவ் எண்ணங்களையும் கடத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் அவர். அந்த வீடியோவைப் பார்த்த பலரும், Gurdeep Pandherஉடன் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள எங்கள் அனைவரையும் குறித்து எண்ணும் உங்களை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ள ஒரு பயனர், உங்களுக்கு தடுப்பூசி கிடைத்ததில் மகிழ்ச்சி, தொடர்ந்து நடனமாடுங்கள் என்று கூறி நெகிழ்ந்துள்ளார்.

மற்றொருவர், உங்கள் மகிழ்ச்சியை உலகத்துடன் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி என்று கூறியுள்ளார்.

Gurdeep Pandherஇன் அந்த நடன வீடியோ வைரலாகியுள்ளது. அதை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்