சர்வதேச பொலிசாரால் தேடப்பட்ட நபர்... பிரித்தானிய மகாராணியாரின் அருகில் அனுமதிக்கப்பட்டது எப்படி: பாதிக்கப்பட்ட நபர் கேள்வி

Report Print Balamanuvelan in கனடா
0Shares

கனடாவின் ரொரன்றோவில் வாழ்ந்துவந்த ஒரு சிறுவன் ஒருநாள் கடத்தப்பட்டான். அவனைக் கடத்தியது வேறு யாருமல்ல, அவனைப் பெற்ற தந்தையான Curtis Hooper என்பவர்தான்!

Hooper தன் சொந்த மகனை ரொரன்றோவிலிருந்து கடத்திக்கொண்டு, தான் பழகிவந்த Teri என்ற பெண்ணுடன் தலைமறைவாகிவிட்டார்.

திருமணமாகி மூன்று வாரங்களிலேயே தனது கணவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தது பின்னர் தெரியவந்ததாக அவரது மனைவியான Carol தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போல், Hooperஐ வலைவீசித் தேடிக்கொண்டிருந்திருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் குழந்தை Jasonஉடன் Teri சிக்க, Hooper அப்போதும் தப்பிவிட்டார்.

மகனைக் கடத்தியதற்காகவும், மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்காததற்காகவும் தொடர்ந்து சர்வதேச பொலிசார் Hooperஐ தேடிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட Hooper ஒரு ஓவியரும் கூட... ஆகவே, பிரித்தானிய மகாராணியாரிடமிருந்து Hooperக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. மகாராணியார் தன்னை ஒரு ஓவியமாக வரைய சம்மதம் தெரிவித்து, Hooperக்கு கடிதம் எழுதியுள்ளார், மகாராணியாரின் அப்போதைய தனிச் செயலராக இருந்த Robert Fellowes.

அதன்படி, 1986ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3ஆம் திகதி பக்கிங்காம் மாளிகைக்கு சென்ற Hooper, மகாராணியாரின் உருவம் மிகச்சரியாக வரவேண்டும் என்பதற்காக அவரை சுற்றிச் சுற்றி புகைப்படம் எடுத்துள்ளார்.

Hooper மகாராணியாரின் படத்தை வரைந்துமுடித்தபின், ராஜ குடும்பத்தினருடன் அவருக்கு விருந்தும் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தேடப்பட்டுவந்த ஒரு குற்றவாளியை எப்படி பக்கிங்காம் அரண்மனைக்குள், மகாராணியாரின் அருகே அனுமதித்தார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் Hooperஇன் மகனான Jason (50).

தனது தந்தை ஒரு மோசமான மனிதர் என்றும், பெற்ற பிள்ளையைக் கைவிட்டுச் சென்றதால் அவர் மீது தனக்கு இன்னமும் கோபம் உண்டு என்றும் கூறுகிறார் Jason.

அவர் தனக்கு பிள்ளைகள் இருப்பதையே கனடாவில் வாழும் தனக்கு நெருங்கிய நண்பர்களிடமிருந்துகூட மறைத்திருந்தாலும், அவரது படைப்புகள் ப்ளோரிடாவில் ஓரிடத்திலிருந்து கிடைக்கப்பெற்ற நிலையில், அவரது கலைப் படைப்புகள் உண்மையாகவே பாராட்டப்படவேண்டியவை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என்கிறார் Jason.

ஆகவே, Hooperஇன் படைப்புகளைக்கொண்டு விரைவில் ஒரு கலைக்கண்காட்சி நடத்த இருக்கிறார் Jason.

என்றாலும், எப்படி இப்படி ஒரு குற்றவாளியை மகாராணியாரின் அருகில் அனுமதித்தீர்கள் என்று கேட்டு பிரித்தானிய அரண்மனைக்கு அவர் எழுதிய கடிதத்துக்கு இன்று வரை பதில் இல்லையாம்!

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்