கனடாவில் வாங்கிய லொட்டரி சீட்டை பொருட்படுத்தாமல் இருந்த தம்பதி! பின்னர் அவர்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

Report Print Raju Raju in கனடா
0Shares

கனடாவில் பணம் கொடுத்து வாங்கிய லொட்டரி சீட்டை காரில் வைத்து விட்டு அதை பொருட்ப்படுத்தாமல் இருந்த தம்பதிக்கு மிகப்பெரிய பணம் பரிசாக விழுந்துள்ளது.

ஒன்றாறியோவை சேர்ந்த தம்பதி கிறிஸ்டா பிரேயர் மற்றும் சட் பிரேயர். இருவருக்கும் லொட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இருந்தது.

அந்த வகையில் தம்பதி வாங்கிய ஒரு லொட்டரி சீட்டை தங்கள் காருக்குள் வைத்திருக்கின்றனர்.

அந்த சீட்டுக்கான முடிவு வந்துவிட்ட போதிலும் அதை பொருட்ப்படுத்தாமல் இருந்தனர்.

ஆனால் பின்னர் கிறிஸ்டா தனது கணவர் சட் பிரேயரிடம் காரில் இருக்கும் லொட்டரி சீட்டை எடுத்து வாருங்கள், எதற்கு அதற்கு பரிசு விழுந்ததா என பார்த்துவிடுவோம் என கூறியுள்ளனர்.

அதன்படி லொட்டரி சீட்டை எடுத்து வந்து ஓன்லைனில் பார்த்த போது அதற்கு $50,000,000 என்ற பிரம்மாண்ட பரிசு விழுந்தது தெரியவந்தது.

இதையடுத்து தம்பதி மகிழ்ச்சியடைந்தனர். கிறிஸ்டா கூறுகையில், வெறும் பரிசு பணத்துக்காக லொட்டரி விளையாட மாட்டோம்.

அதில் சிறிய பரிசு கிடைத்தாலும் மருத்துவமனைகள் மற்றும் தொண்டு விடயங்களுக்கு செலவு செய்வோம்.

தற்போது கிடைத்துள்ள இந்த பரிசை கொண்டு புதிய வீடு மற்றும் வாகனங்கள் வாங்குவோம். இதோடு தொண்டு விடயங்களுக்கு பணம் கொடுப்போம்.

கலிபோர்னியாவுக்கு மீண்டும் போகவேண்டும் என ஆசை உள்ளது.

எங்கள் தேனிலவுக்காக பல ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு சென்றோம் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்