கனடாவில் சற்று முன் நடந்த பயங்கரம்! பிரபல நூலகத்தில் நடந்த கத்தி குத்து: ஒருவர் பலி, பலர் படுகாயம்

Report Print Santhan in கனடா
0Shares

கனடாவில் பிரபல நூலகம் ஒன்றில் நடந்த கத்தி குத்து சம்பவத்தால், ஒரு உயிரிழந்திருப்பதாகவும் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவின் North Vancouver-ல் இருக்கும் Lynn Valley நூலகத்தில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நூலகத்தில் உள்ளேயும், வெளியேயும் தாக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், இந்த கத்தி குத்தி சம்பவத்தால், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுமார் 6 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். டுவிட்டரில் வெளியாகியிருக்கும் ஒரு வீடியோவில், பொலிசார் ஒருவரை பிடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

இந்த நூலகத்திற்கு அருகில், இருக்கும் அலுவலம் ஒன்றில் ஈதன் ஜாக்சன் என்பவர் பணியாற்றி வருகிறார். அவர், இந்த சம்பவம் குறித்து கூறுகையில், ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது.

இதனால் உடனடியாக ஜன்னலை திறந்து பார்த்த போது, ஒரு நபர் தரையில் கிடப்பதைக் கண்டேன்,

அந்த நபரைச் சுற்றி ரத்தம் இருந்தது. அப்போது அவருக்கு துணை மருத்துவர்களால் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர்.

குறித்த சம்பவம் பிற்பகல் உள்ளூர் நேரப்படி 1.46 மணிக்கு நடந்துள்ளது. அதன் பின்னரே பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு 11 ஆம்புலன்சுகளுடன் பொலிசார் விரைந்துள்ளனர்.

கத்தி குத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நிலை குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும், இல்லை. ஆனால் ஒருவர் உயிரிழந்துவிட்டதை பொலிசார் உறுதி செய்துள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக யாரேனும் எதையும் கண்டிருந்தால், உடனடியாக பொலிசாரை தொடர்பு கொள்ளும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்