நள்ளிரவு 1.30 மணிக்கு கடைசியாக காணப்பட்டார்! கனடாவை சேர்ந்த 23 வயதான இளம்பெண் குறித்து பொலிசார் கூறிய தகவல்

Report Print Raju Raju in கனடா
0Shares

கனடாவில் நள்ளிரவில் கடைசியாக காணப்பட்டு பின்னர் மாயமான இளம்பெண் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ரொறன்ரோவை சேர்ந்த பிரிட்டானியா போல்ட் (23).

இவர் கடந்த 27ஆம் திகதி நள்ளிரவு 1.30 மணிக்கு ஜேன் தெருவில் கடைசியாக காணப்பட்டார். இதன் பிறகு போல்ட் காணாமல் போயிருக்கிறார்.

5 அடி 6 அங்குலம் உயரம் கொண்ட அவர் காணாமல் போன போது அணிந்திருந்த உடைகள் தொடர்பான தகவலை பொலிசார் வெளியிட்டிருந்தனர். மேலும் அவரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியையும் நாடினர்.

இந்த நிலையில் போல்ட் தற்போது பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை பொலிசார் உறுதி செய்ததோடு இதற்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்