யாரோ ஒருவருக்கு லொட்டரியில் பெரிய பரிசு விழுந்ததாக நினைத்து கொண்ட கனடிய இளம்பெண்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

Report Print Raju Raju in கனடா
0Shares

கனடாவில் குழுவாக லொட்டரி டிக்கெட் வாங்கியவர்களுக்கு $32,000 பரிசு விழுந்துள்ளது.

பிரிட்டீஷ் கொலம்பியாவின் சரேவை சேர்ந்தவர் ஜெரிகா தாமஸ்.

இவர் தன்னுடன் பணிபுரியும் 10 நண்பர்களுடன் சேர்ந்து லொட்டரி டிக்கெட் வாங்கினார்.

இதில் அவர்களுக்கு $32,000 பரிசு விழுந்துள்ளது. இது குறித்து ஜெரிகா கூறுகையில், கடந்த ஞாயிறு அன்று யாரோ $32,700 பணத்தை வென்றதை கண்டேன்.

பின்னர் நேற்று லொட்டோ செயலியில் பார்த்த போது எங்களுக்கு தான் பரிசு விழுந்தது என்பதை அறிந்து மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனேன்.

உடனடியாக இதை எனது 10 நண்பர்களிடம் கூறினேன், ஆனால் யாரும் நம்பவில்லை. பின்னர் அதை ஸ்கேன் செய்து அனுப்பிய பின்னரே நம்பினார்கள்.

இந்த லொட்டரி பரிசு சிறப்பு வாய்ந்தது என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்