கனடாவில் சாலையை விட்டு வெளியில் சென்ற கார்! உள்ளிருந்த ஓட்டுனருக்கு நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in கனடா
0Shares

கனடாவில் 71 வயதான முதியவர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ஹலிபக்ஸில் தான் இந்த சம்பவம் செவ்வாய்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 9.10 மணிக்கு நடந்துள்ளது.

அங்குள்ள சாலையில் சென்ற கார் திடீரென அதிலிருந்து விலகி அருகில் இருந்த சிமெண்ட் தடுப்பு மீது வேகமாக மோதியது.

இந்த சம்பவத்தில் காருக்குள் இருந்த ஓட்டுனரான 71 வயது முதியவர் உயிரிழந்தார்.

பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்த போதே அவர் சடலமாக தான் கிடந்தார்.

இதன் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பில் மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்