கனடாவில் மூன்று நாய்கள் தாக்கியதில் 17 வயது இளம்பெண் உயிரிழந்துள்ளார்.
ஒன்றாறியோவின் மிடில்செஸ் கவுண்டியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள வீட்டில் யாரோ இறந்து கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
பொலிசாரும், மருத்துவ குழுவினரும் அங்கு சென்ற போது 17 வயது இளம்பெண் உடலில் காயங்களுடன் இறந்துகிடந்தார்.
அவர் மூன்று நாய்கள் கடித்ததால் உயிரிழந்தது தெரியவந்தது.
அந்த மூன்று நாய்களும் தற்போது தனியான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.