கனடாவின் ஒண்டரியோ மாகாணத்தில் கொரோனாவின் 3வது அலையை குறைக்க புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாகாணம் முழுவதும் மக்கள் வீட்டிலேயே இருக்கும் படியான உத்தரவுக்கு ஒண்டரியோ தலைவர் Doug Ford's அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனாவின் 3வது அலையை குறைக்க ஒண்டரியோ அரசு முன்னெடுத்தள்ள நடவடிக்கை போதுமானதாக இல்லை என கடந்த வாரம் விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.
இந்த கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
வியாழக்கிழமை முதல் வீட்டிலேயே இருக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ள கட்டுப்பாடு சுமார் 4 வாரம் வரை அமுலில் இருக்கும் என அமைச்சரவை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

அதே போல் மாகாணத்தில் அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை கடைகளும் மூடப்படும்.
மளிகை கடை மற்றும் மருந்தகங்கள் மட்டுமே திறந்திருக்க அனுமதி வழங்கப்படுமாம். எனினும், பள்ளிகள் மூடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.