கனடிய காகித நாணயங்களிற்கு 2018 வரவு செலவு திட்டம் தடை விதிக்கின்றது!

Report Print Mohana in கனடா
275Shares
275Shares
lankasrimarket.com

லிபரல் அரசாங்கத்தின் 387-பக்கங்கள் கொண்ட 22018-ன் வரவு செலவு திட்டத்தில் உருப்படி ஒன்று ஆழமாக புதைக்கப்படுகின்றது- சில காகித நாணயங்கள் சட்ட பூர்வமானதாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

2000-ல் கனடா வங்கி டொலர்கள் 1,000தாள்கள் அச்சிடுவதை நிறுத்திய போதிலும் கிட்டத்தட்ட 700,000 தாள்கள் இன்னமும் நாட்டில் புழக்கத்தில் இருக்கின்றன.

கள்ள நோட்டுக்கள், பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு போன்ற செயற்பாடுகளை முறியடிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த காகித நாணயங்களை பொருட்கள் வாங்குதல் மற்றும் அனைத்து சேவைகளிற்கும் பயன்படுத்துவதை அரசாங்கம் அனுமதிக்க மாட்டாது. எப்போதிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்பது வரவு செலவு திட்டம் தெரியப்படுத்தவில்லை.

திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களிற்கு டொலர்கள்1,000 தாள்கள்-பணப்பரிமாற்றத்திற்கு இலகுவானவை-என கருதப்படுகின்றது.

ஆனால் இந்த ஒரு தாள் நாணயம் மட்டும் வரலாற்றில் குப்பை தொட்டிக்குள் போகவில்லை. $500, $25, $2 மற்றும் $1 தாள்களை கனடா வங்கி அச்சிடுவதை நிறுத்தி விட்டது.

பழைய வங்கி நோட்டுக்கள் உத்தியோக பூர்வமாக கடன் கொடுப்பனவிற்கான தகுதியை பெற மாட்டாது. 1935ன் டொலர்கள் 25 வங்கி நோட் கடைகளில் பொருட்களை வாங்க உபயோகிக்க முடியாதென மத்திய வங்கி தனது இணையத்தளத்தில் விளக்கியுள்ளது.

புதிய தாள்கள் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவையாதலால் அவைகளை போலியாக தயாரிப்பது கடினமானதுடன் இவை சிறந்த நிலையிலும் உள்ளன என கூறப்பட்டுள்ளது.

இத்தாள்களை வைத்திருக்கும் கனடியர்கள் இவைகயை அவர்களது உள்ஊர் வங்கிகள் அல்லது கிரடிட்

யூனியன்களில் வைப்பு செய்யலாம். அங்கிருந்து மத்திய வங்கிக்கு அனுப்பட்டு அவர்கள் இவைகளை அழித்து விடுவர்.

2012ல் அப்போதைய நிதி அமைச்சர் Jim Flaherty 1-சத நாணயம் செல்லு படியாகாதென அறிவித்ததுடன் நாணய பரிவர்த்தனை மட்டமாக்கப்பட்டது.

1935ல் முதல் முதல் அறிமுகப்படுத்தப்பட்ட டொலர்கள் 1,000 தாளின் முன்பக்கத்தில் அரசியின் உருவப்படமும் பின்பக்கத்தில் pine grosbeaks எனப்படும் ஒரு வகை பாடும் பறவை சோடியும் காணப்படும்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்