ரொரன்ரோவில் ஒன்றரை மாதங்களாக மாயமான தமிழ் பெண்! புகைப்படங்களுடன் வெளியான தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் பாரதி என்ற தமிழ்ப்பெண் ஒன்றரை மாதங்களாக காணாமல் போயுள்ள நிலையில் பொலிசார் அது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ரொரன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் பாரதி பாலசுந்தரம் என்ற 42 வயது பெண் கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி புதன்கிழமை முதல் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதி பாலசுந்தரம் கடைசியாக Queen Street East and Victoria Street பகுதியில் பகல் நேரத்தில் காணப்பட்டார் என கூறப்பட்டுள்ளது.

5 அடி 2 அங்குலம் உயரம் கொண்ட பாரதி ஒல்லியான உருவம் கொண்டவராகவும், கருப்பு நிற முடியும், பழுப்பு நிற கண்களை கொண்டவராகவும் இருப்பார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பாரதியின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொள்வதாக கூறியுள்ள பொலிசார் அவர் மாயமான அன்று அணிந்திருந்த உடைகள் குறித்த தகவலை தெரிவிக்கவில்லை.

மேலும் பாரதி குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் தங்களுக்கு தெரிவிக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளதோடு தொலைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்