டோனி படத்தில் தெறிக்கும் 7 வசனங்கள் இதுதான்!

Report Print Jubilee Jubilee in சினிமா

இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை வரலாற்று படம் உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை தலைவரான டோனியின் வாழ்க்கை படமான "எம்.எஸ். டோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி" என்ற படம் 60 நாடுகளில் 4 ஆயிரத்து 500 திரையரங்குகளில் வெளியாகியது.

ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்தப் படம் வெளியான 5 நாட்களில் 100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது.

இந்தப் படத்தில் டோனி தடைகளை தாண்டி எப்படி கிரிக்கெட் களத்தில் சாதித்தார் என்று அழகாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற சில வசனங்கள் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக உள்ளது. அவற்றில் சிலவற்றைப் பற்றி பார்க்கலாம்.

வாழ்க்கைல எல்லா பந்தும் ஒரே மாதிரி வராது.. சூழ்நிலையை புரிந்து விளையாட கற்றுக் கொண்டால், ஸ்கோர்போர்ட்ல தானா ரன் சேரும்.

பவுலர் விக்கெட் மட்டும் எடுப்பார், பேட்ஸ்மேன் ரன் மட்டும் எடுப்பார், சில சமயங்களில் எடுக்காமல் கூட போவார். ஆனால் நல்ல பீல்டர் எப்போதும் எதிரணியின் ரன்னை தடுப்பார்.

ஒரு அணி சிறப்பாக இருந்தால் மட்டுமே அந்த அணியின் கேப்டன் சிறப்பாக இருக்க முடியும்.

எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். ஆனால் அதற்கான திறமை இல்லை. ஆனால் டோனி திறமை மிக்கவன். அவன் கிரிக்கெட்டில் சாதித்தால் நான் சாதனை செய்தது போல் பெருமிதம் கொள்வேன்.

வேலைக்கு பிறகும் பயிற்சி செய்ய வேண்டும். எவ்வளவு வேலை பார்குறியோ அதைவிட அதிகமாக பயிற்சி செய்ய வேண்டும்.

நான் வேலை என்ற ஒரு விடயத்தில் மாட்டிக் கொண்டால் என்னால் வாழ்க்கையில் ஒன்றுமே சாதிக்க முடியாமல் போய்விடும்.

டோனி அவரை தூக்கிவிட்டவரையே கழற்றிவிட நினைக்கிறார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments