சபாஷ்...பெண்களை பெருமைப்படுத்திவிட்டார்! ஒரு ரசிகையின் புகழாரம்

Report Print Raju Raju in சினிமா

சமீபத்தில் வெளியான பிங்க் இந்தி திரைப்படம் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள் பற்றி அழுத்தமாக பேசியது.

இதை பார்த்த ரசிகை ஒருவர், நடிகை டாப்ஸியின் நடிப்பு சமூகத்தில் பெண்களுக்கு தைரியத்தை அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது என புகழாரம் சூட்டியுள்ளார்.

டாப்ஸியின் நடிப்பும், அவர் ஏற்ற அந்த கதாபாத்திரமும் சமுதாயத்தில் பல பெண்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட ஒரு உந்துதலாக இருக்கும் என கூறிய அவர், சமூகம் என்ன நினைக்கிறது என கவலைப்படாமல் மனதில் தோன்றியதை பேச வேண்டும் என அந்த கதாபாத்திரம் உணர்த்துவதாக தெரிவித்துள்ளார்.

தன் வாழ்க்கையை இந்த படத்துடன் இணைத்து பார்ப்பதாக கூறியுள்ள அந்த பெண், பல நடிகைகள் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தை எடுத்து தைரியமாக நடித்ததற்காக டாப்ஸியை பாராட்டுவதாக கூறியுள்ளார்.

மக்களிடத்தில் சமூக மாற்றம் ஏற்பட இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் எனவும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments