என்னை வைத்து மீடியா நல்லா சம்பாதிக்குது: கொந்தளிக்கும் டோனி பட நாயகி

Report Print Aravinth in சினிமா
154Shares
154Shares
ibctamil.com

எனது சொந்த வாழ்க்கையில் மூக்கை நுழைத்து நல்லா சம்பாதிக்கிறது மீடியா என டோனி பட நாயகி திஷா பதானி கொந்தளித்துள்ளார்.

தெலுங்கு பட நாயகியான திஷா பதானி அண்மையில் வெளியாகிய எம்.எஸ்.டோனி அண்டோல்ட் ஸ்டோரி என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார்.

இந்த படத்தில் காதலியாக நடித்த இவரும், பாலிவுட் நடிகரான டைகர் ஷ்ராபுவும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து திஷா பதானி கூறியதாவது, தினமும் எப்படி ஒரு மீடியாவல் மட்டும் கிசு கிசு எழுத முடிகிறது.

இப்படி அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எழுதுவது தவறில்லையா?

நான் இங்கு வேலை செய்ய வந்துள்ளேன். தயவு செய்து உங்கள் வேலையை மட்டும் பாருங்கள், அடுத்தவர்களின் சொந்த வாழ்க்கையில் மூக்கை நுழைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

மேலும், திஷா பதானியும், டைகரும் காதலிப்பதாக பேசப்பட்டாலும் சம்பந்தப்பட்ட இருவரும் அதை மறுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் தான் திஷா மீடியா மீது கொந்தளித்துள்ளதாக தெரிகிறது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments