பெண்ணுக்கு நிர்வாண செல்பி அனுப்பிய நடிகர்

Report Print Aravinth in சினிமா
810Shares

பிரபல பாலிவுட் நடிகரும், மொடலுமான அஜாஸ்கான் வாட்ஸ் அப் மூலம் பெண்ணுக்கு நிர்வான செல்ஃபி அனுப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை மால்வானி பகுதியை சேர்ந்த அழகு பொருட்கள் கடை நடத்தி வரும் 38 வயதான விவாகரத்தான பெண்ணுடன், அஜாஸ் கானுக்கு முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

முகநூல் மற்றும் வாட்ஸ் அப்பில் தொடர்ந்து பேசி வந்த இவர்களது நட்பு நாளடைவில் நெருக்கம் ஆனது.

இந்நிலையில், கான் திடீரென்று அந்த பெண்ணுக்கு தன்னுடைய நிர்வாண செல்ஃபியை அனுப்பி வைத்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கானுடன் தொடர்ந்து பேசாமல் நேராக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.

புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து, தற்போது நிபந்தனை ஜாமினில் கான் வெளியே வந்துள்ளார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments