அமீர்கான் கோரிக்கையை நிராகரித்த ரஜினிகாந்த்!

Report Print Raju Raju in சினிமா

இன்னும் சில தினங்களில் உலகெங்கும் வெளியாகவிருக்கும் நடிகர் அமீர்கான் நடித்த டங்கல் திரைப்படம் தொடர்பான ஒரு சுவாரசியாமான விடயத்தை அமீர்கான் கூறியுள்ளார்.

படத்தின் விளம்பரம் சம்மந்தமாக செய்தியாளர்களிடம் பேசிய அமீர்கான், டங்கல் திரைப்படத்தை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடவுள்ளோம். என் கதாபாத்திரத்துக்கு தமிழ் டப்பிங் செய்ய நடிகர் ரஜினிகாந்தை அணுகினோம்.

ஆனால் அவர் குரல் மிகவும் பிரசத்தி பெற்றது என்பதால் எல்லோரும் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள்.

அதனால் அவர் டப்பிங் குரல் கொடுக்க வேண்டாம் என நானும், ரஜினியும் சேர்ந்து முடிவெடுத்தோம் என கூறிய அமீர்கான் டங்கல் படத்தை பார்த்த ரஜினிகாந்த் நன்றாக உள்ளது என தன்னை பாராட்டியதாக கூறியுள்ளார்.

தான் தீவீர ரஜினியின் ரசிகர் என கூறிய அவர் ரஜினியுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments