இதற்கு காரணம் தனுஷ் தான்: அமலாபாலின் ஓபன் டாக்

Report Print Aravinth in சினிமா

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அமலாபால்.

இவரும், இயக்குநர் விஜய்யும் காதலித்து கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

இருந்த போதிலும் இவர்கள் திருமணம் நிலைத்து நிற்கவில்லை. இருவருக்கும் கருத்து வேறுபாடு, மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் இவர்கள் விவாகரத்து செய்து கொள்வதற்கு காரணம் நடிகர் தனுஷ் தான் என்று பல கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்தன.

இதுகுறித்து இதுவரை ஒன்றும் பேசாமல் இருந்த அமலா பால் தற்போது முதன் முறையாக தனுஷைப் பற்றி பேசியுள்ளார்.

தனுஷ் குறித்து அமலாபால் கூறியதாவது, எனக்கும் விஜய்க்கும் ஒத்துப் போகவில்லை, அதனால் தான் இருவரும் பிரிந்து வாழ்கிறோம்.

இப்போது அவரவர் வாழ்வில் கவனம் செலுத்தி மகிழ்ச்சியாக உள்ளோம்.

மேலும், தனுஷிடம் நான் வாய்ப்பு கேட்டு போனதில்லை. வடசென்னை, வி.ஐ.பி – 2 தானாக எனக்கு வந்த வாய்ப்பு.

விவாகரத்து குறித்து தனுஷிற்கு எதுவும் தெரியாது. அவர் என்னையும் விஜயையும் சேர்த்து வைக்க தான் அதிகமாக முயற்சி எடுத்தார்.

அப்படி இருக்கையில், அவரையும் என்னையும் சேர்த்து வைத்து பேசுவது எனக்கு மிகவும் அசிங்கமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments