பட்டினி போட்டு கொடுமை செய்த மகன்: நடிகையை தவிக்க விட்டு ஓடிய பரிதாபம்

Report Print Santhan in சினிமா

திரைப்பட நடிகையான கீதா கபூர்ரை அவரது மகன் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் வசித்து வருபவர் கீதா கபூர், இவர் பகீழா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

கீதா கபூருக்கு ராஜா என்ற மகனும், பூஜா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கீதா கபூருக்கு சமீபத்தில் இரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மகன் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

அப்போது மருத்துவமனையில் பணம் கட்ட கூறியதால், அவர் அருகில் இருக்கும் ஏடிஎம் சென்று பணம் எடுத்து வருவதாக கூறி சென்றுள்ளார்.

ஆனால் வெகுநேரம் ஆகியும் வராததால், அவருடடைய தொலைப்பேசிக்கு தொடர்பு கொண்ட போது Not Reachable என்று வந்துள்ளது.

இதனால் மிகுந்த மனவருத்ததிற்குள்ளான கீதா கபூர், ராஜா தன்னை முதியோர் இல்லத்தில் சேரச் சொன்னதாகவும், அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததால், தன்னை தனியறையில் சிறை வைத்து நான்கு நாட்களுக்கு ஒருமுறை சாப்பாடு கொடுத்ததாகவும், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து மருத்துவ நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் ராஜாவை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments