சின்னத்திரை நடிகர்களின் தற்கொலை: பிரபல நடிகர் ஓபன்டாக்

Report Print Fathima Fathima in சினிமா

சமீபகாலமாக சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு படவாய்ப்புகள் இல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாவதே காரணம் என கூறப்பட்டாலும், நெருங்கிய உறவுகளால் ஏமாற்றப்படுவதும் காரணமாக அமைகிறது.

இந்நிலையில் விஜய்யின் நண்பனும், பிரபல நடிகருமான சஞ்சீவ் கூறுகையில், அனைவருக்கும் மன அழுத்தம் இருக்கத்தான் செய்யும், மன அழுத்தம் இல்லாத மனிதர்களை பார்க்க முடியாது.

எதுவுமே வாழ்க்கையில் நிரந்தரம் கிடையாது, அது கவலையாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி.

இதுவும் கடந்து போகும் என்பதை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும், எதுவுமே நிரந்தரம் இல்லை.

மகிழ்ச்சியாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments