லண்டனில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்தது என்ன? சகோதரி விளக்கம்

Report Print Santhan in சினிமா

நேற்று, இன்று, நாளை என்கிற இசை சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்ச்சி கடந்த 8-ஆம் திகதி லண்டனில் நடைபெற்றது.

இந்த இசை நிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல்கள் அதிகமாகப் பாடப்பட்டதாகவும், அதனால் சிலர் வெளியேறியதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இது குறித்து ரஹ்மான் சகோதரி ரெஹானா கூறுகையில், நீங்கள் நினைப்பது போன்று அங்கு எதுவும் நடக்கவில்லை.

டுவிட்டரில் தான் இதை சர்ச்சையாக்கி வருகின்றனர். அப்படி எதுவும் நடந்திருந்தால் தான் கண்டுபிடித்து இருப்பேன்.

ஏனெனில் நிகழ்ச்சியின் போது நான் ரசிகர்களை தொடர்ந்து கவனிப்பேன். எனக்கு தெரிந்து ஒரு குழு எழுந்து 'ஹம்ம ஹம்மா' பாடலுக்கு ஆட்டம் போட்டதை மட்டும் தான் நான் பார்த்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் நிகழ்ச்சியை புறக்கணித்து யாரும் வெளியேறிவிடவில்லை. இவர்கள் கூறுவது போல் நிகழ்ச்சியை பார்க்க வந்த 10,000 பேரில் 10 பேர் மட்டும் வெளியேறினால் தங்களுக்கு எப்படித் தெரியும். அப்படி ஒன்று நடந்ததா? அல்லது பொய் கூறுகிறார்களா? என்பது தெரியவில்லை.

அவர்கள் கூறுவது படியே 10 பேர் வெளியேறினாலும், அவர்கள் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கு கூட சென்றிருக்கலாம்.

உண்மையை கூற வேண்டுமென்றால், நிகழ்ச்சி விரைவில் முடிந்துவிட்டது, இன்னும் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது போன்றுதான் அங்கிருந்தவர்களின் மனநிலையாக இருந்தது.

இந்த நிகழ்ச்சியின் தலைப்பு மிகத் தெளிவாக உள்ளது.

அப்படி என்றால் தமிழர்கள் கூட ஹிந்தி பாடல்கள் பாடுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டியிருக்கலாம். இதுபோன்று சர்ச்சைகளை ஏன் உருவாக்குகிறார்கள் என்று தெரியவில்லை.

அங்கு வந்த யாரும் எதுவும் செய்யவில்லை. இதன்மூலம் ஏதோ புது சர்ச்சையை உருவாக்க நினைக்கிறார்கள். அங்கு நடைபெறாத ஒன்றை நடப்பதாக கற்பனை செய்து கூறுகிறார்கள் என்று ரெஹானா கூறினார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments