நடிகர் கமல்ஹாசனின் உருவ பொம்பை எரிப்பு: கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

Report Print Santhan in சினிமா

தமிழகத்தில் நடிகர் கமல்ஹாசனை கைது செய்யக் கோரி சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் கோவையில் சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தினர் சமூகச் சீரழிவை ஏற்படுத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அவர்கள் கமல்ஹாசனை கைது செய்யக் கோரி வலியுறுத்தியும், உருவ பொம்மை எரித்தும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கூறுகையில், பிக்பாஸ் கலாச்சார சீரழிவு நிகழ்ச்சி. இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் கமல் அரசைப் பற்றி பேசுவது கேலிக்கூத்தாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments