நடிகை பாவனா கடத்தல் வழக்கு: வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்ட திலீப்

Report Print Santhan in சினிமா

பிரபல திரைப்பட நடிகையான பாவனா கடத்தல் வழக்கு விவகாரம் தொடர்பாக நடிகர் திலீப் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நடிகை பாவனா கடத்தல் விவகாரம் தொடர்பாக நடிகர் திலீப் கடந்த 10-ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அதன் பின் சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து அவர் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து திலீப்பின் நீதிமன்ற காவல் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் அங்கமாலி நீதிமன்றத்தில் திலீப் ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணைக்கு பின் திலீப்பின் நீதிமன்ற காவலை மேலும் இரண்டு வாரங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. திலீப் தற்போது அலுவா சப் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers