நடிகை பாவனா கடத்தல் வழக்கு: கைதாகிறார் காவ்யா மாதவன்?

Report Print Santhan in சினிமா

பிரபல திரைப்பட நடிகையான பாவனா கடத்தல் வழக்கு விவகாரம் தொடர்பாக, பொலிசார் நடத்திய விசாரணையின் போது, நடிகை காவ்யா மாதவன் முறையாக பதில் அளிக்காத காரணத்தினால் அவரை பொலிசார் கைது செய்து விசாரிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திரைப்பட நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ஆம் திகதி படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

அப்போது ஆபாச படம் எடுக்க பயன்படுத்திய மெமரிக்கார்டை முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் காவ்யா நிறுவனத்தில் கொடுத்ததாக கூறப்பட்டது.

அதன் பின் பொலிசார் காவ்யா நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முக்கிய தகவல்கள் கிடைத்தாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த கடத்தல் விவகாரம் குறித்து நடிகை காவ்யா மாதவனுக்கு தெரியும் என்று பல்சர் சுனில் பொலிசாரிடம் கூறியுள்ளார். இதனால் பொலிசார் காவ்யா மாதவனை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக கேராளவில் உள்ள திலீப் வீட்டிற்கு பொலிசார் சென்ற போது, அங்கிருந்த காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

6 மணி நேரம் விசாரணை நடத்தியும் காவ்யா மாதவனிடம் இருந்து எந்த உபயோகமான தகவல்களை பொலிசாரால் பெற முடியாத காரணத்தாலும்,பொலிசார் விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்காத காரணத்தினாலும் காவ்யா மாதவனை கைது செய்து விசாரிக்கலாமா என்று பொலிசார் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...