அனைவருக்கும் நன்றி: நடிகர் விஜய்யின் அதிகாரப்பூர்வ கடிதம்

Report Print Fathima Fathima in சினிமா

மெர்சல் படத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றி என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

அதில், மெர்சல் திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி மக்களின் பாரட்டுக்களுடன், நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மாபெரும் வெற்றி அடைந்துள்ள மெர்சல் திரைப்படத்திற்கு சில எதிர்ப்புகளும் வந்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் என் கலையுலகைச்சார்ந்த நண்பர்களான நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், திரையுலக அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம்,

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் தேசிய அளவில் பிரபல மான அரசியல் தலைவர்கள் மாநில கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள்,

பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளம், பண்பலையைச் சேர்ந்த ஊடக நண்பர்கள், எனது நண்பா, நண்பிகள் (ரசிகர்கள், ரசிகைகள்) பொதுமக்கள் அனைவரும் எனக்கும் மெர்சல் படகுழுவினருக்கும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள்.

மேலும் மெர்சல் திரைப்படத்தை மாபெரும் வெற்றி பெற செய்ததற்கும், ஆதரவு கொடுத்ததற்கும், அனைவருக்கும் இத்தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நன்றி கலந்த வணக்கத்துடன் உங்கள் விஜய் என குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...