பிரபாகரன் திரைப்படம் குறித்து மஞ்சு மனோஜ் வெளியிட்ட தகவல்

Report Print Murali Murali in சினிமா

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து தெலுங்கில் எடுக்கப்பட்ட ஒக்காடு மிகிலாடு திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

இந்த திரைப்படம் தமிழில் “நான் திரும்ப வருவேன்” என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் மஞ்சு மனோஜ் தனது அனுபவங்களை வெளியிட்டுள்ளார்.

“இது ஒரு வழக்கமான வணிகப்படம் கிடையாது. காதல் படமும் கிடையாது. இந்த படத்தில் நடிக்கும் போது மிகவும் பொறுப்புள்ள ஒருவனான இருக்க வேண்டியிருந்தது.

இந்த திரைப்படத்தின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த போது தொடர் காயங்களுக்கு உள்ளாகியிருந்தேன். அதன் காரணமாக இரண்டு மாத இடைவெளி எடுக்கவும் நேரிட்டது.

இந்த திரைப்படம் குறித்து இயக்குநர் நீண்ட ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். இது ஒரு தீவிர உணர்ச்சி மிக்க திரைப்படமாகும். இந்த படத்தில் நடித்தவர்களில் அனேகமானவர்கள் புதியவர்கள்.

படத்தில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டு காட்சிகளை படமாக்கிய போது நிஜத்தை போன்று உணர்ந்தோம். படத்தில் சிறப்பான காட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அது ஒரு கடல் பயணத்தில் சிக்கிக்கொண்ட 10 பேர் எதிர்கொண்ட சூழ்நிலையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட காட்சியாகும். இந்த காட்சியினை அமைப்பதற்கு 60 நாட்கள் எடுத்தது.

இந்த காட்சியில் நடித்தவர்கள் மரணத்தின் விளிம்பிற்கு சென்று வந்தார்கள்” என நடிகர் மஞ்சு மனோஜ் தனது அனுபவங்களை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த திரைப்படத்தை அஜய் ஆண்ட்ரூஸ் நுதாக்கியின் இயக்கியுள்ளார். 1990ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை போர் குறித்த சம்பவங்களை இந்த படத்தில் கதைக்களமாக வைத்துள்ளனர்.

அத்துடன், யுத்த காலத்தில் இலங்கையில் இருந்து 15 லட்சம் பொதுமக்கள் அகதிகளாக வெளியேறிய சம்பவங்களையும் படத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்