அரசியலில் கால்பதிக்கும் 'தல' அஜித்: தமிழக அரசியலில் பரபரப்பு

Report Print Samaran Samaran in சினிமா

விசிறி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ஆரி, தல அஜித் விரைவில் அரசியல் களம் காண்பார் என்று தெரிவித்தார்.

மகாலிங்கம் இயக்கத்தில் ராஜ் சூர்யா, ராம் சரவணா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விசிறி’. இதில் ரிமோனா ஸ்டெப்னி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் இன்று நடைபெற்றது.

இதில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், தமிழக பாஜக மாநில துணை தலைவர் பி.டி.அரசகுமார், பாடலாசிரியர் மதன்கார்க்கி, நடிகர் ஆரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் ஆரி, விசிறி திரைப்படம் சிறப்பாக வந்திருப்பதாக கூறினார்.

தமிழக அரசியலில் நடிகர் அஜித் பெயரை நாம் இன்னும் சேர்க்கவில்லை. அவரது அரசியல் வருகைக்கு முன்பு, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டங்களுடன் தயார் நிலையில் உள்ளார். என்னென்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.

வெளிநாடுகளுடன் ஒப்பிட்டு, தமிழகத்தை எவ்வாறெல்லாம் மேம்பாடு அடையச் செய்யலாம் என்றும் ஆலோசித்து வருவதாக தனக்கு தகவல் கிடைத்ததாக நடிகர் ஆரி கூறினார்.

இதனால் அஜித் அரசியல் வருகை குறித்து, ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்