வைரலாகும் சிவகார்த்திகேயனின் கிரிக்கெட் வீடியோ

Report Print Kabilan in சினிமா
93Shares
93Shares
ibctamil.com

நடிகர் சிவகார்த்திகேயன், படப்பிடிப்புக்கு இடையே கிரிக்கெட் விளையாடிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில், பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பின் போது கிடைத்த ஓய்வு நேரத்தில் சிவகார்த்திகேயன், சூரியுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்