பகவத் கீதையை படிக்கும் ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திரம்

Report Print Kabilan in சினிமா

ஹாலிவுட்டின் பிரபல நடிகர் வில் ஸ்மித் இந்திய சமய புத்தகமான ‘பகவத் கீதை’-ஐ படித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட நடிகர் வில் ஸ்மித், ‘Bright' என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் சிறப்பு காட்சிக்காக அவர், இந்தியாவின் மும்பை நகருக்கு வந்தார். பின்னர், அவர் இந்திய கலாச்சாரம் குறித்து பேசினார்.

இது தொடர்பாக வில் ஸ்மித் கூறுகையில், ‘நான் இந்தியாவுக்கு சில முறை வந்துள்ளேன். இந்திய வரலாறு, கலாச்சாரம், பண்பாடு ஆகியவை எனக்குப் பிடிக்கும். பகவத் கீதையை 90 சதவீதம் வரை படித்திருக்கிறேன்.

இப்போதும் படித்துக் கொண்டிருக்கிறேன், என்னுள் அர்ஜூனன் இருக்கிறார், மறுமுறை இந்தியா வரும்போது, ரிஷிகேஷ் சென்று அங்கு நீண்ட நாட்கள் தங்கியிருக்க விரும்புகிறேன்.

கடந்த முறை இங்கு வந்த போது, நடிகர் அக்ஷய் குமார் எனக்கு விருந்து கொடுத்தார். அவர் கொடுத்த உணவு, எனது வாழ்நாளிலேயே நான் சாப்பிட்ட சிறந்த உணவாகும்.

மேலும் ஒருமுறை இங்கு தங்கினால் அக்ஷய் குமாரிடம் உணவு கேட்பதில் தவறில்லை என நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

டேவிட் அயர் இயக்கத்தில், வில் ஸ்மித் நடித்துள்ள ‘Bright' திரைப்படம் வரும் 22ஆம் திகதி, உலகம் முழுவதும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers