கிடா வெட்டி சோறு போடுவேன்: ரஜினிகாந்த்

Report Print Samaran Samaran in சினிமா

ரசிகர்களுக்கு கிடா விருந்து போட ஆசை இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் 3வது நாளாக, நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

அதில் மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர்.

அப்போது பேசிய அவர், ரசிகர்களுக்கு கிடா வெட்டி சோறு போட ஆசை உள்ளது, ஆனால் ராகவேந்திரா மண்டபம் சைவம் என்பதால், வேறு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன்.

ரசிகர்கள் எனது காலில் விழ வேண்டாம், கடவுள், தாய், தந்தை, பெரியோர்கள் காலில் மட்டுமே விழ வேண்டும்.

பணம், பெயர், புகழ், அதிகாரம் உள்ளவர்கள் காலில் விழ வேண்டும் என்று அவசியமில்லை.

மதுரை என்றாலே வீரத்துக்கு அடையாளம், உங்களைப் போலவே சிறுவயதில் நடிகர் ராஜ்குமாரின் ரசிகனாக இருந்தேன்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers