முறையாக தமிழ் கற்று வரும் சன்னி லியோன்

Report Print Harishan in சினிமா

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தான் முறையாக தமிழ் மொழியை கற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்திய கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கென உலகம் முழுவதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

அப்படிப்பட்ட சன்னி லியோன், தமிழ் உள்ளிட்ட நான்கு தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்படும் வீரமாதேவி திரைப்படத்தின் கதாநயகியாக நடிக்க சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் பிரபல தனியார் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியில், சவால்கள் நிறைந்த இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதன் காரணமே அங்கு கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.

குறிப்பாக புதிய மொழிகளை கற்றுக் கொள்வதில் எனக்கு எப்போதும் ஒரு தனி ஆர்வம் உண்டு. இப்போது கூட தமிழ் மொழியை முறையாக கற்று வருகிறேன்.

இந்த படத்தின் முக்கியமான காட்சிகளுக்காக இந்தியா மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் குதிரை சவாரி கற்று வருகிறேன் என்றும் சன்னி தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் மட்டுமின்றி எந்த மொழியாக இருந்தாலும் கதாப்பாத்திரம் பொருந்தக்கூடியதாக இருந்தால் அதில் நடிப்பேன் என சன்னி லியோன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers