திரைத்துறையினரின் வேலைநிறுத்த போராட்டம்: 400 கோடி முடக்கம்

Report Print Kabilan in சினிமா

தமிழ் திரையுலகினரின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், 400 கோடி முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரையரங்குகளில் Digital-யில் திரையிட CUBE நிறுவனம் அதிகளவில் பணம் வசூலிப்பதை கண்டித்து, திரைத்துறையினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக கடந்த மார்ச் 1ஆம் திகதி புது படங்களின் திரையிடல் நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக, நேற்று முதல் 40 படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் Editing, பாடல் பதிவு, Dubbing பிற சினிமா பணிகளும் நடைபெறாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.

அத்துடன், வெளிநாடுகளில் நடைபெற்று வரும் படப்பிடிப்புகளும், வரும் 23ஆம் திகதி முதல் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்தது. இதன் காரணமாக சுமார் 400 கோடி வரை முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers