இந்தியாவில் வாக்குரிமை இல்லாத சினிமா பிரபலங்கள்: ஓர் அலசல் ரிப்போர்ட்

Report Print Athavan in சினிமா

இந்திய நாட்டில் ஜனநாயக முறைப்படி 18 வயது நிரம்பியவர்கள் அனைவருக்கும் ஓட்டுப் போடும் உரிமை உண்டு. ஆனால் சில சினிமா பிரபலங்களுக்கு இந்தியாவில் ஓட்டுப் போடும் உரிமை இல்லை. அந்த பட்டியலில் உள்ள நடிகர் நடிகைகள் இதோ.

அக்ஷய் குமார்

பாலிவுட்டில் மிக முக்கியமான நடிகர் அக்ஷய் குமார். படங்களுக்காக பல மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடிக்க கூடியவர். ஆனால் இவர் கனடா பாஸ்போர்ட் வைத்திருப்பதால் இவரால் இந்தியாவில் ஓட்டுப் போட முடியாது.

தீபிகா படுகோன்

இந்திய நடிகைகளில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இவர் பெங்களூரை சேர்ந்தவராக இருந்தாலும் இவரது தந்தை டென்மார்க்கில் பிறந்தவர் என்பதால் இவரால் இந்திய தேர்தலின் போது ஓட்டுப் போட முடியாது.

ஆலியா பட்

இவரது தந்தை மகேஷ் பட் மிகவும் பிரபலமான இயக்குனர். இவரது தாய் பிரிட்டனை சார்ந்தவர். ஆகவே ஆலியா பட் பிரிட்டன் பாஸ்போர்ட் வைத்துள்ளார். எனவே அவரால் இந்தியாவில் வாக்களிக்க முடியாது.

கட்ரினா கைப்

ஹிந்தி திரையுளகில் முன்னனி நடிகையான கட்ரினா கைஃப்.அக்‌ஷயைப் போன்று இவரும் கனடா நாட்டின் பாஸ்போர்ட் வைத்துள்ளார். ஆகையால் இவரும் தேர்லில் ஓட்டுப் போட முடியாது.

இம்ரான் கான்

இம்ரான் கான் இவரும் பாலிவுட்டில் மிகவும் முக்கியமான நடிகரும் கூட. இவரது உறவினர்கள் அனைவரும் இயக்குனர் தயாரிப்பளாரகவும் உள்ளனர். ஆனாலும் இவரால் தேர்தலின் போது ஓட்டுப் போட முடியாது. இவர் அமெரிக்கா நாட்டு பாஸ்போட்டை வைத்துள்ளார்.

ஜாக்லின் பெர்னான்டஸ்

இவரது தந்தை இலங்கையை சேர்ந்தவர். தாய் மலேசியாவை சேர்ந்தவர். ஜாக்லின் பக்ரைனில் பிறந்தவர். பாலிவுட்டில் முன்னனி நடிகையாக இருந்தாலும். இவரால் இந்திய தேர்தலில் ஓட்டுப் போட அனுமதியில்லை.

எமி ஜாக்சன்

தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தற்போது பாலிவுட் ஹாலிவுட் என கலக்கிக் கொண்டிருப்பவர். பிரிட்டனைச் சேர்ந்தவர். அதனால் இவரால் ஓட்டுப் போட முடியாது.

நர்கிஸ் பாக்ரி

அமெரிக்காவைச் சேர்ந்தவரான நர்கிஸ் பாக்ரி ஹிந்தியில் ராக் ஸ்டார் போன்ற வசூல் படைத்த படத்தில் மிகவும் சிறப்பாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். இவர் அமெரிக்காவை சேர்ந்தவர். ஆகையால் இவருக்கு தேர்தலில் ஓட்டுப் போட அனுமதி இல்லை.

சன்னி லியோன்

இவரை தெரியாமல் யாரும் கிடையாது என்பது தான் உண்மை. அமெரிக்கா பாஸ்போர்ட் உள்ளதால். இவர் ஓட்டுப் போட முடியாது.

வருண் தவான்

வருண் தவான் மும்மையில் பிறந்தவர். இவரும் ஹந்தி திரையுலகில் பிரபலமான நடிகர். இவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் இவருடைய பெயர் ஓட்டு போடுபவர் பட்டியலில் இல்லை, அதை இவரும் கண்டுகொள்ளவில்லை.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers