முதல் மனைவியுடன் சுற்றுலா சென்ற போனி கபூரை கோபத்தில் திட்டிய ஸ்ரீதேவி

Report Print Athavan in சினிமா

முதல் மனைவி மற்றும் குழந்தைகளை சந்தித்த போனி கபூரை ஸ்ரீதேவி திட்டித் தீர்த்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

திருமணமான புதிதில் போனி கபூர் தன்னை விட்டு சென்றுவிடுவாரோ என்ற பயத்திலும் ஸ்ரீதேவி இருந்துள்ளார்.காரணம் போனி கபூர் ஸ்ரீதேவி திருமணம் எளிமையாக கோவிலில் நடைபெற்றது தானாம். இந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்ற நிலை வந்துவிடுமோ என்ற அச்சத்திலும் அவர் இருந்துள்ளார்.

ஹிந்தி பட தயாரிப்பாளரான போனி கபூர் மோனா என்ற பெண்ணை திருமணம் செய்து அர்ஜுன், அன்சுலா என்ற 2 குழந்தைகள் அந்த தம்பதிகளுக்கு உள்ளன.

இதன் பின்னர் போனி கபூர் நடிகை ஸ்ரீதேவியை காதலித்தார். ஏற்கனவே திருமணமான போனி கபூரை ஸ்ரீதேவியும் மணந்து கொண்டார்.

ஸ்ரீதேவியை மணந்த பிறகு போனி தனது முதல் மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஒரு முறை சுற்றுலா சென்றுள்ளார். இது ஸ்ரீதேவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

போனி கபூர் தனது முதல் மனைவி, குழந்தைகளுடன் வெளியே சென்று வந்ததை அறிந்த ஸ்ரீதேவி உங்களுக்கு அவர்களை தான் ரொம்ப பிடிக்கும் என்றால் அங்கேயே போய்விட வேண்டியது தானே என்று கோபத்தில் அவரை திட்டியுள்ளார்

போனிக்கு பிள்ளைகள் அர்ஜுன், அன்சுலா என்றால் உயிர். ஆனால் அவர்களை கூட பார்க்க போனியை அனுமதிக்கமால் ஸ்ரீதேவி இருந்துள்ளார். போனி கபூர் தனது முதல் மனைவியை சந்திக்காதபடியும் பார்த்துக் கொண்டுள்ளார் ஸ்ரீதேவி.


மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers