சினிமாவில் இருந்து விலகிய பிரபல ஹாலிவுட் நடிகை

Report Print Kabilan in சினிமா

பிரபல ஹாலிவுட் நடிகை Cameron Diaz, சினிமாவில் இருந்து விலகி விட்டதாக தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை Cameron Diaz(45). தனது 16வது வயதில் மொடலிங் துறையில் நுழைந்தார், 1994ஆம் ஆண்டு வெளியான ‘The Mask' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பிறகு, My best friend's wedding, Charlie's Angels, Shrek, Gangs of Newyork, The Holiday, Minority Report, Sex Tape, Knight and Day போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

ALMA, MTV, Teen Choice, Kids Choice போன்ற விருதுகளை வென்றுள்ள Diaz, Golden Globe விருதுக்கு பலமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார். அதற்கு காரணம் அவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

பல்வேறு நடிகர்களுடன் இணைத்து பேசப்பட்ட Diaz, கடந்த 2015ஆம் ஆண்டு Benji Madden என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், தனது குழந்தைகளை கவனிப்பதற்காக அவர் சினிமாவில் இருந்து விலகுவதாகக் கூறப்பட்டது.

இது குறித்து அவரிடம் கேட்டபோது, ‘நான் ஏற்கனவே Retired ஆகிவிட்டேன்’ என தெரிவித்துள்ளார். இந்த விடயம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Cameron Diaz கடைசியாக, கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘Annie' எனும் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers