'கடைக்குட்டி சிங்கம்’ படத்தை பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர்!

Report Print Vijay Amburore in சினிமா
73Shares
73Shares
ibctamil.com

ஆபாசமில்லாமல் காட்டிய சுவாரஸ்யமான நல்ல படம் என இந்திய குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியாகியுள்ள கடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டியுள்ளார்.

சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடித்து, கடந்த 12-ம் தேதி வெளியான திரைப்படம் 'கடைக்குட்டி சிங்கம்'.

தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் இப்படத்தில், சத்யராஜ், விஜி, பானுபிரியா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா பினு, சயிஷா, சூரி என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.

தெலுங்கில் “சின்னபாபு“ என்ற பெயரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை பார்த்த இந்தியாவின் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான "சின்னபாபு" (தமிழில் "கடைக்குட்டி சிங்கம்") திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம்" என பதிவிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "நாட்டு மக்களின் பெருமதிப்புக்குரிய தாங்கள்,எங்களின் படைப்பான 'கடைகுட்டி சிங்கம்' திரைப்படத்தைப் பார்த்து மனம்திறந்து பாராட்டியது,எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது.படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும்,தங்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள்" என பதிவிட்டுள்ளார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்