தமிழர்களை பெருமைப்படுத்திய நடிகர் விஜய்! சர்வதேச அளவில் கிடைத்த கௌரவம்

Report Print Kabilan in சினிமா

நடிகர் விஜய் 2018ஆம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான ‘மெர்சல்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் ஜி.எஸ்.டி குறித்து விஜய் பேசிய வசனம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், டிரெண்ட் ஆனது.

எனினும், இந்த திரைப்படம் பிரித்தானிய தேசிய திரைப்பட விழாவில் சிறந்த அயல்நாட்டு படமாக தெரிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், IARA எனும் சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ‘மெர்சல்’ படத்தில் நடித்ததற்காக, சிறந்த சர்வதேச நடிகராக அவர் இந்த விருதுக்கு தெரிவாகியுள்ளார்.

ஒரு தமிழ் நடிகர் சர்வதேச அளவில் சிறந்த நடிகராக தெரிவு செய்யப்பட்டுள்ளது, உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்