இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் விஜய் சேதுபதியின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? டிவி நிகழ்ச்சியில் உருக்கம்

Report Print Santhan in சினிமா

பிரபல திரைப்பட நடிகரான விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி ஒன்றில், தன்னுடைய முதல் சம்பளத்தைப் பற்றி நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து, அதன் பின் குணச்சித்திர நடிகர், வில்லன் என்று பல ரோல்களில் நடித்து வந்த விஜய்சேதுபதி, இன்று பல முன்னணி நடிகர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி வந்து கொண்டிருக்கிறார்.

சினிமாவில் நடித்தாலும், அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் விஜய்சேதுபதி தான் சிறுவயதில் எவ்வளவு துன்பங்களை சந்தித்தேன் என்று கூறி வருவார்.

அதுமட்டுமின்றி சமூக அக்கறை அதிகம் கொண்ட, இவர் எதைப் பற்றியும் தைரியமாக பேசும் குணம் கொண்டவர்.

இந்நிலையில் இவர் பிரபல தனியார் சேனல் ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். அதில் மிகவும் கஷ்டப்படும் மக்கள், உங்கள் ஊரின் ஹீரோவாக இருப்பவர்கள் என அவர்களை அழைத்து பேசப்பட்டு வருகிறது.

இப்படி நிகழ்ச்சி தொகுத்து வழங்கி கொண்டிருந்த போது தான் விஜய்சேதுபதி தன்னுடைய முதல் சம்பளம் வெறும் 500 ரூபாய் தான் என்று கூறியுள்ளார். இப்போது அதே விஜய் சேதுபதி 8 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers