கொரோனாவிலிருந்து மீண்டு விட்டேன்: பிரபல நடிகை வெளியிட்ட உருக்கமான பதிவு

Report Print Fathima Fathima in சினிமா

கொரோனாவாலிருந்து மீண்டு விட்டதாக உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார் பிரபல நடிகை மலைக்கா அரோரா.

மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் ‘தக்க தைய்ய தைய்யா’ என்ற பாடலுக்கு நடனமாடி பிரபலமானவர் இந்தி நடிகை மலைக்கா அரோரா.

சமீபத்தில் இவரது காதலன் அர்ஜூன் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இவருக்கும் கொரோனா உறுதியானது.

இந்நிலையில் தான் கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டதை பதிவிட்டுள்ள மலைக்கா, நீண்ட நாட்களுக்கு பின்னர் என் அறையை விட்டு வெளியே வந்துள்ளேன்.

கொரோனாவிலிருந்து மீண்டதை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன், மருத்துவ ஆலோசனைகள் வழங்கிய மருத்துவர்கள், மும்பை மாநகராட்சி, நண்பர்கள், குடும்பத்தினர், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்