கல்வியை முழுமையாக பெற்றுக் கொள்ள ஆரோக்கியம் அவசியமாகும்

Report Print Nesan Nesan in சமூகம்
40Shares
40Shares
lankasrimarket.com

கல்வியை முழுமையாக பெற வேண்டுமாக இருந்தால் முதலில் உட, உள ஆரோக்கியம் உள்ளவனாக இருத்தல் வேண்டும் என மடட்டக்களப்பு அரசாங்க அதிபர் மா.உதயகுமார் கூறியுள்ளார்.

பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலய தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியின் இறுதி நிகழ்வு நேற்று பாடசாலை மைதானத்தில் பாடசாலை முதல்வர் க.தம்பிராசா தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

கல்வியை முழுமையாக பெறவேண்டுமாக இருந்தால் முதலில் உட, உள ஆரோக்கியம் உள்ளவனாக இருத்தல் வேண்டும். அவ்வாறான உடல், உள ஆரோக்கியம் இருக்கும் மனிதன்தான் சமச்சீரான வெற்றியினை பெற்றுக்கொள்ள முடியும்.

இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். எனவே அவர்கள் தங்களது ஆசிரியர்களுக்கு மதிப்பளித்து பெரியோர்களுக்கு கனமளித்து ஒழுக்கமுள்ளவர்களாக வாழ்கின்றபோது சிறந்தமுறையில் தமது எதிர்காலத்தினை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

மாணவர்கள் இளமைக்காலத்தில் கல்வியினை கற்கின்றபோது சிறந்த ஒழுக்கமுள்ள குழந்தைகளாக மிளிர முடியும்.

எனது இந்த சேவைக்காலத்தின்போது கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதனை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றேன்.

காரணம் தற்போதைய சூழலில் கல்விதான் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்