பல்கலைக்கழக பரீட்சைகள் ஒத்திவைப்பு

Report Print Aasim in சமூகம்
197Shares
197Shares
lankasrimarket.com

வார இறுதி நாட்களில் நடைபெறவிருந்த பல்கலைக்கழக பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகம் உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு அரச பல்கலைக்கழகங்களில் இவ்வார இறுதியில் பரீட்சைகள் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தன.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை தொடக்கம் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பள உயர்வு கோரி அவர்கள் மேற்கொள்ளும் வேலைநிறுத்தப் ​போராட்டம் தொடர்பில் தீர்வுகள் முன்வைக்கப்படாமையின் காரணமாக வேலைநிறுத்தம் தொடர்கின்றது.

இதன் காரணமாக வாரஇறுதி நாட்களில் நடைபெறவிருந்த பரீட்சைகளை ஒத்திவைக்க நேர்ந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் திடீர் அறிவித்தல் காரணமாக ஏராளமான பரீட்சார்த்திகள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்