கணனி பயிற்சியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

Report Print Ashik in சமூகம்
42Shares
42Shares
lankasrimarket.com

நானாட்டான் - அளவக்கை கிராமத்தில் 'நண்பனின் தேவை நற்பணி மன்றத்தின்' ஏற்பாட்டில் கடந்த 3 மாதங்களாக இலவச கணனி பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பயிற்சியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை அளவக்கை ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.

நண்பனின் தேவை நற்பணி மன்றத்தின் நிர்வாக அலுவலகர் கே.பவமொழி பவன் தலைமையில் குறித்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

இதில் அளவக்கை பங்கு தந்தை சுரேந்திரன் றெவல், வட மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்