வழமைக்கு திரும்புகிறது கண்டி! திங்கள் முதல் பாடசாலைகள் ஆரம்பம்

Report Print Evlina in சமூகம்
96Shares
96Shares
lankasrimarket.com

கண்டி மாவட்டத்திலுள்ள அரசாங்க பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக கண்டி மாவட்டத்திலும் நாட்டின் சில பகுதிகளிலும் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றதன் காரணத்தினால் கடந்த செவ்வாய்க்கிழமை கண்டி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் பிரதான பாடசாலைகளுக்கு இடையில் நடத்துவதற்கு தீர்மானிக்கபட்டிருந்த வருடாந்த கிரிக்கெட் சமர் உட்பட இன்னும் சில நிகழ்வுகள் கால வரையறையின்றி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, தற்போது குறித்த அசாதாரண நிலை சற்றே தணிந்து வருவதால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் பாடசாலைகள் இயங்கும் என மத்திய மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்