ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வெறுமையாக கிடந்த கதிரைகள்

Report Print Theesan in சமூகம்
75Shares
75Shares
lankasrimarket.com

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இணைத்தலைவர்கள் அற்ற நிலையில் கூடியுள்ளது.

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று காலை பிரதேச செலயாளர் க.பரந்தாமன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

இணைத்தலைவர்கள் சமூகமளிக்காத நிலையிலும், பெரும்பாலான திணைக்களங்களின் பணிப்பாளர்கள் கலந்து கொள்ளாத நிலையிலும் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதேவேளை குறித்த கூட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ம.தியாகராசா, பொலிஸார் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கூட்டத்தில் இணைத்தலைவர்கள் மற்றும் குறிப்பிட்டளவு திணைக்களத்தலைவர்கள் அற்ற நிலையில் பெருமளவான கதிரைகள் வெறுமையாக காணப்பட்டதாக பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், தீர்மானங்கள் எடுப்பதற்கும், அதனை அமுல்ப்படுத்துவதற்கும் திணைக்களப் பணிப்பாளர்கள், இணைத்தலைவர்கள் சமூகமளித்திருப்பது மிகவும் அவசியமாகும்.

அவர்கள் அற்ற நிலையில் கூடும் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் பயனற்றதாகவே அமையவுள்ளது எனவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்